ராமநாதபுரம்: 11 வயது சிறுவன் பலி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த நாகநாதபூபதி மகன் சாய்ராம் பாண்டியன் (11).இவருக்கு கடந்த மூன்று நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்ததை அடுத்து தேவிபட்டினம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பிளேட் ரேட் குறைந்து உடல்நிலை மோசமானதால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையினால் ஆங்காங்கே மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த சுகாதாரப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுப்பெற்றுள்ளது.

Tags

Next Story