இராமநாதபுரம் : பயிர் காப்பீட்டுத் தொகை கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்காத திமுக அரசை கண்டித்து திருவாடானையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு முழுமையான காப்பீடு தொகை வழங்கியுள்ள நிலையில், திருவாடானை தாலுகா மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்க்கு உட்பட்ட 57 வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இது விவசாயிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரியும், திமுக அரசை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story