ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவில் தங்கும் விடுதிகள் ஆய்வு

ஏர்வாடி தர்காவில் தங்கும் விடுதிகள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வரும் யாத்திரைகளிடம் தங்கும் விடுதிகளில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது தங்கு விடுதிகளின் உரிமம் மற்றும் விடுதியில் அறைகளை பார்வையிட்டார் மேலும் தங்கும் விடுதிகளில் முறையாக கட்டணம் அட்டவணை ஒட்டிருக்க வேண்டும் என்றும் தங்கும் யாத்திரைகளுக்கு முறையாக ரசீதுகள் வழங்க வேண்டும் என்றும் தங்குபவர்களிடம் அடையாள அட்டைகள் பெற்றிருக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்திற்கு தங்குபவர்களுடைய விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் கீழக்கரை துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story