ராமநாதபுரம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசளிப்பு விழா

ராமநாதபுரம் நண்பர்கள் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசு அளிக்கும் விழா நடந்தது.
ராமநாதபுரம் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசளிப்பு விழா தனியார் மஹாலில் நடந்தது. இதில் இலங்கையை சேர்ந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுவாய்சா டெமுனி நுவான் தரங்கா கலந்துகொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் தரங்கா நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் 50 ஓவர் போட்டிகள் மட்டுமே நடந்து வந்தது தற்போது டி20 டி10 போட்டியெல்லாம் நடந்து வருகிறது ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் வீரர்களை சென்னையில் பார்க்க முடிகிறது அந்த அளவுக்கு சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னும் அதிகமான வீரர்கள் ராமநாதபுரத்தில் இருந்து டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்த வேண்டும். மேலும் ஐசிசி மற்றும் பிசிசிஐ போன்றவைகள் கிரிக்கெட் விளையாட்டில் நவீன யுக்தியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இம்பாக்ட் பிளேயர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது மேலும டி 20 போட்டிகளில் பேட்ஸ்மேன் களுக்கு மட்டும்தான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. பந்து வீசுபவர்களின் பலத்தையும் அதிகரிக்க நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை தொடர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது இதில் இந்தியா மிகப்பெரிய அணியாக உருவெடுத்து விளையாட காத்திருக்கிறது. ஆனாலும் மேற்கிந்திய தீவு அணியினர் தங்களுடைய உள்ளூர் மைதானத்தில் மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். மேலும் கிரிக்கெட் வீரர்கள் செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் தேவைக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றார். பரிசளிப்பு விழாவின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கண்ணா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story