ராமநாதபுரம் அயோத்தி கும்பாபிஷேக திரையில் கண்டு களித்த பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் அயோத்தி கும்பாபிஷேக விழாவை திரையில் கண்டு ரசித்த ஆன்மீக பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் அயோத்தி கும்பாபிஷேக விழாவை திரையில் கண்டு ரசித்த ஆன்மீக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரண்மனை பகுதியில் ஜெய் வீர ஆஞ்சநேயர் தரிசனம் செய்த பின்பு பெரிய சிவன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பஜனைகள் பாடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அரண்மனை வளாகப் பகுதியில் அமைந்துள்ள ராணி மகாலில் சிறப்பு கும்பாபிஷேக விழாவை காண திரை அமைக்கப்பட்டு அதில் ஏராளமானவர் கண்டு களித்தனர். இதில் மதுரை ஆதீனம் சிறப்பு அழைப்பாளராகவும் தென்மண்டல பார்வேர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி , மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலா ராணி கிருபா ரெத்தினம், சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மாவட்ட பார்வையாளர் முரளிதரன் மாநில செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன் மற்றும், மாநில நிர்வாகி ஆத்மா கார்த்திக் , மாவட்ட பொது செயலாளர் மணிமாறன், ராமநாதபுரம் பாஜக பிரமுகர் சண்முகநாதன் ஒன்றிய தலைவர் சண்முகநாதன் சேதுபதி, ஊடகப் பிரிவு தலைவர் குமரன். மாவட்டத் துணைத் தலைவர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story