ராமநாதபுரம் : தடை செய்யப்பட்ட மீன்கள் பறிமுதல்
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் மாவட்ட ஆட்சியர் விசு சந்திரன் தலைமை உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது அவ்வழியாக உச்சிப்புளி நோக்கி சந்தேகப்படும்படி சென்ற சரக்கு வாகனத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லிங்கவேல் நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு லிங்க வேல் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் உச்சிப்புளி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் தேலி மீன் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அபுதாகிர், ஐயப்பன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லிங்கவேல் கூட்டாக இணைந்து அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் தேள் மீன் சுமார் 800 கிலோவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் பரமக்குடி அடித்த மஞ்சூரில் இருந்து உச்சிப்புளிக்கு கோரி தீவனத்திற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மீனை பட்டினம்காத்தான் மேம்பாலம் அருகே குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
மேலும் இதுபோன்ற ஆப்பிரிக்கன் தேலி மீனை பொதுமக்கள் வாங்கி உணவுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், இதனால் புற்றுநோய், தோல்நோய், குழந்தையின்மை, இதய நோய் போன்ற நோய்கள் வரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.