தனியார் கலை கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

தனியார் கலை கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரியில் 44-வது ஆண்டு விழா.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 44-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.சேக்தாவூது தலைமையில் நடைபெற்றது.

முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னியல் துறையின் தலைவர் எஸ்.பி.நாகராஜன் வரவேர்ப்புரை வழங்கினார். இவ்விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், ராமநாதபுரம் ஸ்ரீ ரமணா கட்டட கட்டுமான தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் காந்தி , ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கடந்த வருடம் அனைத்து துறைகளிலும் பாலிடெக்னிக் கல்லூரியின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் வெற்றிகள் பற்றி எடுத்துரைத்து ஆண்டு அறிக்கையினை கல்லூரி பி.மருதாச்சலமூர்த்தி சமர்ப்பித்தார். இவ்விழாவில் கடந்த ஏப்ரல் 2023 மற்றும் அக்டோபர் 2023 வாரிய தேர்வுகளில் ஒவ்வொரு பருவத்திலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் , பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கும் , கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் விஷ்ணு மாநில அளவில் தரம் பெற்று 700 க்கு 696 மதிப்பெண்கள் மற்றும் நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்தமைக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மின்னணுவியல் துறை தலைவர் பி.பாலசுப்ரமணியன் நன்றிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story