வேளாண் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

வேளாண் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

மகளிர் தினக் கொண்டாட்டம்

மகளிரை பாராட்டி நடைபெற்ற விழா.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

மகளிர் தினத்தை முன்னிட்டு கமுதி, பேரையூர் மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் பல துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் ஐந்து பெண்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டனர். இதில் பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி கேசவன், முதுகுளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சத்யா, பேரையூர் நடுநிலைபள்ளி உதவி தலைமையாசிரியர் அன்னக்கிளி, பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயசுமதி, மற்றும் கமுதி வருவாய் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கல்லூரியின் பொருளியல் உதவி பேராசிரியர் நவீன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் அகமது யாசின் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமையுரை வழங்கினார்.

விழாவின் முக்கிய பகுதியாக சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து, பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். விழாவின் நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் திருவேணி நன்றியுரை ஆற்றினார். உதவி பேராசிரியர் ரஞ்சிதம், மற்றும் உதவி பேராசிரியர் நவீன் இவ்விழாவை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

Tags

Next Story