ராமநாதபுரம் மான் வேட்டையாடிய இருவர் கைது

ராமநாதபுரம் மான் வேட்டையாடிய இருவர் கைது
ராமநாதபுரம் அருகே இரு புள்ளி மான்களை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் வசிக்கும் உதயகுமார் என்பவர் சந்தேகத்திற்கிடமாக சென்று . அப்போது, அவரிடம் விசாரித்ததில் இரண்டு புள்ளி மான்களை புல்லங்குடி கண்மாய் பகுதியில் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில், அவரிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு மான்களின் தலை மற்றும் கால்கள், தோல் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்காக ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு கைது செய்யப்பட்டார்.மேலும், வேட்டையில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சுகன், வெங்கடேஷ், ஆகிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சமூக காலமாக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் இல்லாததால் காட்டுப் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது மேலும் பறவை சரணாலயம் பகுதிகளான தேர்த்தங்கால் பெரிய கண்மாய் சித்திரங்குடி, கீழச்செல்வனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் வருகை அதிகரித்து உள்ள நிலையில் பாதுகாப்பு குளறுபடிகள் அதிகரித்து உள்ளது.

சுட்டரிக்கும் கடும் வெயிலில் குடிநீருக்காக பறவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது குறிப்பாக சமீபகாலமாக குடிநீருக்காக காட்டுப்பகுதியில் உள்ள புள்ளி மான்கள் வீட்டு பகுதிகளுக்கு வரும் நிலை அதிகரித்துள்ளது இதனால் சமூக விரோதிகள் புள்ளிமான்களையும் வெளிநாட்டு பறவைகள் மற்றும் அரிய வகை பறவைகளையும் வேட்டையாடி வரும் நிகழ்வு அதிகரிக்க தொடங்கி உள்ளது இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

Tags

Next Story