ராமநாதபுரம்: அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரத்தில் திமுக அரசை கண்டித்து பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி மகன் மருமகள் இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை கையில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கதக்கது.

இச்சம்பவத்திற்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் யாரேனும் இது பற்றி பேசக்கூட இல்லை மேலும் திமுக எம்பி ஆ. ராசா முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்திற்குரியது. என்றும் ராமேஸ்வரத்தில் ரேஷன் கடையில் முறைகேடாக பொருள் வழங்கியதை தட்டிக்கட்ட முருகன் என்பவர் மீது திமுக கட்சியினர் தாக்கியதற்கு போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை தற்போது இவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

மேலும் திமுக எம்பி ஆ.ராசா முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றிய தவறான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் தமிழகத்தில் முற்றிலும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பத்திரிக்கையாளருக்கு எந்தவித பாதுகாப்பும் இந்த அரசு வழங்கப்படவில்லை என்றார். அதிமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ஓம் சக்தி நகர் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் இந்நாள் மாவட்ட செயலாளர் அவர்கள் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story