ராமநாதபுரம் : பணி நீக்கம் செய்வதற்காக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடி பேரூராட்சி வாரச்சந்தையில் சென்ற சனிக்கிழமை வார சந்தையில் வியாபாரம் செய்யவிடாமல் தடுத்த இ ஓ நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நல சங்க அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடி பேரூராட்சி வாரச்சந்தையில் சென்ற சனிக்கிழமை அன்று சாயல்குடி வார சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தவழும் மாற்றுத்திறனாளி மாரியம்மாள் கெட்ட வார்த்தைகளால் திட்டியும், பொருட்களை காலால் எத்தி தன்னுடைய அதிகார திமிரை காண்பித்த பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் என்பவரை மாவட்ட ஆட்சியர் தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

ஆனால் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலகர் சேகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து புதன்கிழமை அன்று சாயல்குடி மூக்கையூர் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயல் அலுவலகத்தை நிரந்தர பணி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் .

கடலாடி தாலுகா தலைவர் நூர் முகமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் அகில இந்திய செயலாளர் நம்பிராஜன், சிபிஎம் முதுகுளத்தூர் தாலுகா குழு செயலாளர் முருகன் , கடலாடி மேற்கு தாலுகா குழு செயலாளர் முத்துச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணகி, விவசாய சங்க நிர்வாகி மயில் வாகனம், சிஐடியு மாவட்ட பொருளாளர் முத்து விஜயன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,

மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்கம் முதுகுளத்தூர் தாலுகா தலைவர் முனியசாமி, செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ஆரோக்கிய பிரபாகர், துணைத் தலைவர் முத்து கண்ணன், மயில்சாமி, கமுதி தாலுகா தலைவர் சந்திரன், செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் முத்து மாணிக்கம் , ரகுமான், கடலாடி தாலுகா தலைவர் நூர் முகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story