ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மனு

ராமநாதபுரத்தில் மூடப்பட்ட கோயில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் திருவிழாவில் உரிய பாதுகாப்பு வழங்கிட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் தாலுகா சித்திரங்குடி ஊராட்சி 'இறைச்சிகுளம்' கிராமத்தில் உள்ள 'ஸ்ரீ பேராயிரமூர்த்தி கோயிலில்' பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு நடத்தி வந்த நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த தனிநபரான 'வரதராஜன்' என்பவர், அந்த கோவிலில் தனக்கு முன்னுரிமையும் முதல் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தில் ஆளும் கட்சியின் துணையோடு பண பலம் படைத்த அந்த நபர் செய்த அராஜகத்தால், ஊர் பொதுமக்களை ஒதுக்கி வைத்து விட்டு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழா நடந்தபோது ஏற்பட்ட பிரச்சினையால் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஊர் பொதுமக்களின் முயற்சியால், இன்னும் சில தினங்களில் மீண்டும் அந்த கோவிலில் திருவிழா நடக்க உள்ள நிலையில், திருச்சி மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வரும் 'வரதராஜன்' ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தோடு அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் மட்டும் முன்னுரிமையும் முதல் மரியாதையும் வழங்க ஏற்பாடு செய்து வருகிறார். இதனால்,சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு கிராமத்தில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, அந்த திருவிழா நடைபெறும் சமயத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கிட கோரியும், தனிநபரின் அராஜகத்தை தடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

Tags

Next Story