ராமநாதபுரம்: தி.மு.க கொடியேற்றும் நிகழ்ச்சி

ராமநாதபுரம்:  தி.மு.க கொடியேற்றும் நிகழ்ச்சி

இனிப்பு வழங்கல் 

ராமநாதபுரம் நகராட்சியில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் நகராட்சி 20-வது வார்டு இளங்கோவடிகள் தெருவில் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தி.மு.க கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். ராமநாதபுரம் வடக்கு நகர செயலாளர் ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை வகித்தார்.ராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளர் ராமநாதபுரம் நகரசபை துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார்.ராமநாதபுரம் யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா.அகமது தம்பி,முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன்,அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ.பிரதீப்,மண்டபம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் தேர்போகி முத்துக்குமார்,உட்பட தி.மு.க மாவட்ட,நகர்,ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 20-வது வார்டு செயலாளர்,ராமநாதபுரம் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பொறியாளர் கா.மருதுபாண்டி செய்திருந்தார்.

Tags

Next Story