ராமநாதபுரம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் : மீனவர்கள்
தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மீட்போம் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்
ராமநாதபுரம் வங்க கடலில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள் தடைக்காலம் இன்று நிறைவடைந்தது இதனை அடுத்து ஆழ்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படும் இவ்வாறு தடைக்காலம் விதிக்கப்படும் நாட்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு கருத்தில் கொண்டு மீனவர் அடையாள அட்டை வைத்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு சுமார் 8000 ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளது இவ்வாறு இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு நிறைவு பெற்றது இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர் மேலும் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்துவதற்காக ஐஸ்பெட்டிகளில் ஐஸ் கட்டிகள் நிரப்புவது படகுகளை இயக்குவதற்கு தேவைப்படும் டீசல் பெட்ரோல் பங்கில் நிரப்புவது மற்றும் மீன்பிடிக்க தேவைப்படும் உபகரணங்களை படகுகளில் அடுக்குவது உணவுகள் தயார் செய்வதற்கான பொருட்களை படகுகளில் சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் சுமார் 61 நாள் தடைக்காலத்திற்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வரும் சூழ்நிலையில் இலங்கை கடற்படை பிரச்சனை ஏதேனும் இருக்குமோ என்ற ஒரு வித அச்சத்துடனும் பயத்துடனும் தற்போது ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர் மேலும் மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ராமேஸ்வரத்தில் நிலவுவதாகவும் குறிப்பிட்ட சில கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு குறைந்த விலையில் இறால் மீன்களை எடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு இது குறித்து உரிய கவனம் செலுத்தி மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தேர்தல் நேரத்தில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி கொடுத்த அரசு கச்சத்தீவு பகுதியில் இலங்கை இந்திய இரு நாட்டு மீனவர்களும் சமூகமான முறையில் மீன்பிடிப்பதற்கு வழிவகை செய்ய நடவடிக்கை எடுப்பதோடு இருநாட்டு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என ராமேஸ்வரம் கூட்டுறவு மீனவ சங்க தலைவர் தேவதாஸ் பேட்டி தெரிவித்துள்ளார்
Next Story