ராமநாதபுரம் மின்வாரிய அலுவலர் கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்

ராமநாதபுரம் மின்வாரிய அலுவலர் கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்

 பிச்சை எடுக்கும் போராட்டம்

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து மின் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் ராமேஸ்வரம் பகுதியில் மின் இணைப்பு பெற்றுள்ள பல நுகர்வோர் வீடுகளில் உள்ள பழுதான மீட்டர்களால் , பலமடங்கு அதிகமாக தவறாக மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் மேல்முறையீடு செய்தது பல மாதங்கள் அலைந்தாலும் மின் நுகர்வோர்களுக்கு, புதிய மீட்டர் பொருத்தி பிரச்சினையை தீர்க்கவில்லை, பலநூறு மக்கள் தினசரி இராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து முறையீடு செய்ய வண்ணம் உள்ளனர். எனவே மக்களின் பணத்தை குறுக்கு வழியில் பறிக்கும் இராமேஸ்வரம் மின்வாரிய அலுவலக நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்து 19.02.2024 அன்று காலை 11 அளவில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.

Tags

Next Story