ராமநாதபுரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுசரிப்பு
ராமநாதபுரம் கன்னிகாபுரி கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ம்தேதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் மூக்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரி கிராமத்தில் குழந்தை உரிமைகளும் நீங்களும் மற்றும் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி நிறுவனங்களின் வழிகாட்டுதலின் படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
கன்னிகாபுரி கிராம சிறுவர் மன்ற தலைவர் சே.முனீஸ்பிரபா வரவேற்புரை நிகழ்த்த குழந்தைகள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் குறித்து ஓவியம் வரைந்தும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறும்படம் மூலமாகவும் நடித்து காட்டினார்கள். மரக்கன்றுகள் நடுவது, மரம் வளர்த்து எவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது குறித்தும் குழந்தைகள் அனைவரும் தங்களது பங்கேற்பை உறுதி செய்தனர். சிறுவர் மன்ற உறுப்பினர் த.ஜெபமாலைத்தங்கம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரூரல் ஒர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பணியாளர் அ.சத்யா செய்திருந்தார்.