ராமநாதபுரம் சமத்துவ பொங்கல் விழா

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேலு மாணிக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேலு மாணிக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தைப்பொங்கல் பண்டிகை 'சமத்துவ பொங்கல் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் பாரம்பரிய விளையாட்டுகள், கிராமியப் பாடல்கள் பாடுவது, நாட்டுப்புற நடனம், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் கண்கவரும் ரங்கோலி கோலங்கள், புள்ளி கோலங்கள் வரையப்பட்டிருந்தன. பொங்கல் விழா சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story