ராமநாதபுரம் : ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அல்குத்புல் அகதாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 850ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் பூகழ்மாலை கடந்த மே 9 ல் தொடங்கி நாள்தோறும் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது.மே18ம் தேதி மாலை 5:00 மணியளவில் அடிமரம் ஏற்றப்பட்டது.

நேற்று முன்தினம் 5:00 மணியளவில் ஏர்வாடி முஜாவிர் நல்ல இபுராஹீம் சந்தனக்கூடு தைக்கா வில் இருந்து மேளதாளங்கள் வாண வேடிக்கை முழங்க தர்ஹா வரை ஊர்வலமாக வந்தனர். 20குதிரைகள் ஒட்டகம் முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்ஹாவை மூன்று முறை சுற்றி வலம் வந்தது. மாலை 6:30 மணியளவில் யானை மீது கொண்டு வரப்பட்ட கொடியினை தர்ஹா ஹக்தார் நிர்வாகத்தினர் கொடியேற்றம் செய்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். வருகிற மே31மாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு திருவிழா ஆரம்பமாகி ஜுன் 1ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் மக்பாராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 7 மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படும் இன்று இரவு 7:00 மணிக்கு தப்ரூக் எனும் நேய் சோறு வழங்கப்படும்.

Tags

Next Story