ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ராமநாதபுரம் டவுன் மீன் மார்க்கெட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட மீன் கடைகளில் உள்ளன. இங்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர

ராமநாதபுரம் டவுன் மீன் மார்க்கெட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று குளத்தில் உள்ளதடைசெய்யப்பட்ட தேளிமீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருவதாக கிடைத்த தகவலின்அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி ராமநாதபுரம் டவுனில் உள்ள மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் 45 நாட்கள் கடலில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. சாதாரண கரைவலை மீன்கள் மட்டுமே விற்க வேண்டும் ஆனால் இங்கு தடை செய்யப்பட்ட தேளி மீன்களை விற்பனைக்கு அதிக அளவு பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மீன் மார்க்கெட் பகுதிகளில் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் ராமநாதபுரம் டவுன் மீன் மார்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது, மேலும் மொத்தம் (19) கிலோ மீன்கள் வைத்திருந்தனர் இவற்றை கைப்பற்றிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயகுமார் உடனடியாக பினாயில் ஊற்றி அழித்தார். உடன் லிங்கவேல் ஜெயராஜ் தர்மர் உடன் இருந்தனர்.

Tags

Next Story