ராமநாதபுரம் : கொடி நாள் நிதி வசூல் துவக்கம்

ராமநாதபுரம் : கொடி நாள் நிதி வசூல் துவக்கம்

நலத்திட்ட உதவிகள் 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் படைவீரர் கொடிநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் படைவீரர் கொடிநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமையேற்று முன்னாள் படை வீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், முப்படைகளில் பணிபுரியும் வீரர்களின் தியாகத்தையும், வீரச்செயல்களையும் போற்றிடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடிநாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இத்தகைய விழா நடைபெறுகிறது. கொடிநாள் என்பது மக்களின் பங்களிப்பால் தரக்கூடிய நிதியினை நாட்டின் பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் படைவீரர்களை போற்றும் விதமாக அவர்களுக்கும் அவர்தம் சார்ந்தோர்களுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் செய்திடும் வகையில் இத்தகைய நிதி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கீடு தொகையான ரூ. 68,49,524/- யாக கொடி நாள் நிதியாக பெறப்பட்ட நிதி முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோல் இந்த ஆண்டு அரசு நிர்ணயிக்கும் கொடிநாள் இலக்கீடு நிதி பொதுமக்கள் ஆதரவுடன் 100 சதவீதம் இலக்கை அடைய செய்து நம் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு தெரிவித்தார். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு கொடிநாள் நிதியினை வழங்கி 2023 ஆம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலினை துவக்கி வைத்தார். தொடர்ந்து முன்னாள் படை வீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையாக 12 நபர்களுக்கு ரூ.4 இலட்சத்திற்கான நிதியுதவியினை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் முருகன் , முப்படை வாரிய உபத்தலைவர் கமாண்டர் நடராஜன் , மாவட்ட முன்னாள் படை வீரர் நல சங்கத் தலைவர் சாத்தையா , முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பாளர் அல்போன்ஸ் ஞானதீபம் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story