ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் தீவிர வாக்கு சேகரிப்பு
பிரச்சாரத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை ஓபிஎஸ் போட்டியிடுகிறார்கள் என மக்களிடம் கேட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பிரச்சார வாகனத்தின் கீழே நின்றவர் தீடீரென வைத்த கோரிக்கை சட்டென்று வாக்குறுதி அளித்த ஓபிஎஸ்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் பேச்சை வேட்பாளராக பலாப்பழ சின்னத்தில் முன்னாள் முதல் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல் ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார் அப்போது அரண்மனை பகுதியில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பேசிய அவர், எத்தனை ஓபிஎஸ் ராமநாதபுரம் மக்களவை தொகுதி போட்டியிருக்கிறார்கள் என மக்களை பார்த்து கேட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்னுடன் சேர்த்து ஆறு ஓபிஎஸ்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை ஓபிஎஸ்கள் இருந்தாலும் அம்மா அவர்களால் மூன்று முறை முதலமைச்சர் ஆக்கப்பட்டவர், அதிமுகவில் 12 வருடங்கள் தொடர்ந்து பொருளாளராக இருந்தது இந்த ஓபிஎஸ் மட்டும் தான் என்றார் மக்களின் ஆசிர்வாததால் பலாப்பழ சின்னம் கிடைத்தஉள்ளது. ராமநாதபுரம் புண்ணிய பூமியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளில் இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சி அடைய செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழிற்சாலைகளை பிரதமரிடம் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன். பாதுகாக்கப்பட்ட குடிநீர் தரமான சாலை வசதி, மகளிர் அனைவருக்கும் சுகாதாரக் கூடங்கள் அமைத்துக் கொடுப்பேன் அதற்கு பலாப்பழ சின்னத்தில் வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்கும்போது பேசினார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்து பின்னர் திடீரென தனது பிரச்சார வாகனத்திற்கு கீழ் நின்ற நபர் ஒருவர் அவரிடம் அதிமுக ஆட்சியில் பொதுபணித்துறை அமைச்சராக நீங்கள் இருந்தபோது பெரிய கண்மாய் தூர்வாரப்பட்டது. பின்னர் தூர்வாரப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். அதற்கு உடனே பதில் அளித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் முதல் வேலையாக பெரிய கண்மாய் தூர்வாரி கொடுக்கப்படும் என்றார்.
Next Story