ராமநாதபுரம் : அரசு பள்ளி அறிவியல் கண்காட்சி

ராமநாதபுரம் : அரசு பள்ளி  அறிவியல் கண்காட்சி
திருப்பாலைக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியரின் செயல்பாட்டை கல்வி அதிகாரிகள் பொதுமக்கள் பாராட்டினர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் சா.ராஜூ தலைமை தாங்கினார். இவரின் பெரும் முயற்சியால் சீரும் சிறப்புமாக பொதுமக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக பள்ளியை நடத்தி வருகிறார் மாணவர்களின் அறிய கண்டுபிடிப்புகளை கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

இதை அறிந்த கல்வி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசு பள்ளியில் இது போன்ற நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகும் குறிப்பாக அரசுப் பள்ளியில் நடைபெறும் இது போன்ற நிகழ்வு வெகுவாக பாராட்டத்தக்கது என்று தலைமை ஆசிரியர் ராஜு அவர்களின் பெரும் முயற்சியை வெகுவாக பாராட்டினர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராதிகாபிரபு, வட்டார கல்வி அலுவலர்கள் தேன்மொழி, வட்டார மேற்பார்வையாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டார்.

மாணவர்கள் தங்களின் படைப்புகளான ஏவுகணை செலுத்தும் வாகனம், சாலை, கடல், வான் வழி, செயற்கை கோள்கள் என 60-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்து விளக்கினர். கண்காட்சியை திருப்பாலைக்குடி காந்திநகர் தொடக்கப்பள்ளி மாணவர்கள், திருப்பாலைக்குடியில் உள்ள 2 தனியார் நர்சரி பள்ளி மாணவ, மாணவிகளும் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story