ராமநாதபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை

ராமநாதபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்    வெட்டிக் கொலை

கொலை செய்யப்பட்ட ஆசிரியர்

கமுதி அருகே கே.பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்ய பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கண்ணன்(51) பள்ளி கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கப்பட்டதால்,

இவர் தனது இருசக்கர வாகனத்தில் கே. பாப்பாங்குளம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பாங்குளம் விலக்கு சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆசிரியர் கண்ணனை மர்ம நபர்கள் வழி மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பியோடினர்.

இது குறித்து கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் கண்ணன் ரியல் எஸ்டேட் செய்து வந்ததாகவும், இதில் தொழில் போட்டி மற்றும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப் படுகிறது. ஆசிரியர் கண்ணன் கமுதி செட்டியார் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா (42) என்ற மனைவியும்,

ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆசிரியர் கண்ணன் உடல் கமுதி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது.இதுகுறித்து ஆசிரியர் கண்ணனின் மனைவி சங்கீதா கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு,கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story