ராமநாதபுரம் பாட்டிக்கு நூறாவது பிறந்த நாள் கொண்டாடிய பேரன் பேத்திகள்

ராமநாதபுரம் பாட்டிக்கு நூறாவது பிறந்த நாள் கொண்டாடிய பேரன்  பேத்திகள்

பிறந்த நாள் கொண்டாடிய பேரன்கள்

ராமநாதபுரம் நூறு வயது மூதாட்டியை திடீரென எண்பதுக்கும் மேற்பட்ட உறவினர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காளிகாதேவி அம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பாப்பம்மாள். இவர் 1924 ஆம் ஆண்டு பிறந்தார் இளம் வயதில் மிகவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்ந்து வந்தவர் பாப்பம்மாள் இவருக்கு கம்பு கேழ்வரகு சோளம் குதிரைவாலி மட்டை அரிசி சாதம் என அந்த காலத்தில் உள்ள சத்தான உணவுகளை சாப்பிட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

இதனால் தற்போது நூறாண்டுகள் வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வருகிறார் இவருக்கு 6 பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் மொத்தம் எட்டு குழந்தைகள் உள்ளனர். சுமார் 60க்கும் மேற்பட்ட பேரன்பேத்திகள் கொள்ளுப்பேத்திகள் என ஊரே கண் படும் அளவுக்கு உறவுகள் உள்ளனர்.

பாப்பம்மாள் பாட்டிக்கு நூறு வயது அடைந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என இவரின் குடும்பத்தினர் முடிவு செய்து திடீரென ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பாப்பம்மாள் பாட்டியை காண ராமநாதபுரம் வந்தனர் அப்போது பார்ட்டிக்கே தெரியாமல் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

பாப்பம்மாள் பாட்டியின் நூறாண்டு கொண்டாட்டத்தில் குடும்பமே குதுகுலமானது புத்தம் புதிய ரூபாய் நோட்டு தாள்களை மாலையாக பாட்டிக்கு அணிவித்தும். பூ மாலைகள் அணிவித்தும் சால்வைகள் அனுபவித்தும் அவர்களின் சந்தோசங்களை ஒவ்வொரு குடும்பத்தினரும் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். ராமநாதபுரம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி குடும்பத்தினர் ஒரு மிகப்பெரியவிழாவை எடுத்து மகிழ்ந்தனர்.

தாய் தந்தையர்களை காப்பகத்திலும் முதியோர் இல்லத்திலும் அனாதைகளாக தவிக்கவிட்டு உயிரிழக்கும் அவல நிலை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில். தங்களை பெற்றெடுத்து உருவாக்கி நல்ல நிலைமைக்கு வருவதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்த பாப்பம்மாள் பாட்டியின் குடும்பமே கொண்டாடி குதூகலம் ஏற்படுத்தியது இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தெறிக்க விட்டனர். அந்த தெருவில் உள்ள அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுத்தியது இவரின் குடும்பத்தினர்கள் தற்போது மதுரை பரமக்குடி காரைக்கால் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும் இந்த நூறாவது நாளை கொண்டாடுவதற்காக ஒரு நாள் ஒதுக்கி அனைவரும் மகிழ்ச்சியோடு பாட்டியின் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பாட்டியை இவர்களின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சிகரமாக பார்த்துக் கொள்கிறார்கள்.

. எங்கள் பாட்டி இதுவரை இந்த மருத்துவமனைக்கு செல்லவில்லை அந்த காலகட்டத்தில் உள்ள இயற்கையான உணவுகளை சாப்பிட்டதால் தற்போது நூறாண்டுகள் வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

இன்றைய அவசர துரித உணவுகள் சாப்பிட்டு குறைந்த வயதில் மரணத்தை தழுவும் நபர்களுக்கு மத்தியில் பாரம்பரிய இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பறைசாட்டி எங்கள் பாட்டி வாழ்ந்து வருகிறார் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என பாட்டியின் மகன் பேரன் பேத்திகள் தெரிவித்தனர்.

Tags

Next Story