ராமநாதபுரம் குறைதீர்க்கும் முகாம் ரத்து !
கோரிக்கை மனு
மக்கள் குறைதீர்க்கும் இன்று ரத்து செய்யப்பட்டதை அறியாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை அங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர்.
ராமநாதபுரம் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்க இருந்த குறைதீர் கூட்டம், சிறப்பு முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்திருந்தார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பிரதி வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற சிறப்பு குறை தீர்க்கும் கூட்டங்களும் கிராமப் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் இன்று ரத்து செய்யப்பட்டதை அறியாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை அங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர். இது ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story