ராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பெண்களுக்கு விருது

மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை புரிந்த பெண்களுக்கு ரெட் கிராஸ் சார்பில் விருது வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மகளிர் தின விழா ராமநாதபுரத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கல்வி, போலீஸ், குருதிக் கொடை, தேசப்பற்று ஆகியவற்றில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது முதுகலை ஆசிரியர் தேவி உலகராஜ் எழுதிய கம்பரின் பெண்கள் நூலை ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலர் ரமேஷ் வெளியிட முஹமது சதக் ஹமீதியா மகளிர் கல்லூரி முதல்வர் மீரா பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story