ராமநாதபுரம் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயிலரங்கம்

ராமநாதபுரத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென் மண்டல பயிலரங்கில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயிலரங்க விழா நடந்தது. இதில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் தெற்கு, சிவகங்கை, மதுரைவடக்கு, மற்றும் தெற்கு, தேனி ஆகியமாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல பயிலரங்கம் தனியார்மகாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது தலைமையில் நடந்தது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ,சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ,ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய உயர் கல்விதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எக்காரணத்தைக் கொண்டும் பா ஜ க வெற்றி பெற கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் அதிமுக கட்சி என்பது எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோதே முடிந்து விட்டது. இனி அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தேசியத்தலைவர் K.M.காதர்மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது நாங்கள் திமுகவுடன் தான் எப்பொழுதும் இருப்போம் மேலும் கூடுதலாக தொகுதி கொடுத்தால் வாங்கிக் கொள்வோம். ராமநாதபுரத்தில் இருக்கின்ற தொகுதியை விட்டுக் கொடுக்காமல் தற்போது இருக்கும் எம். பி. நவாஸ்கனிக்கு மீண்டும் வாய்ப்பு கேட்டு தக்கவைப்போம் என்றார்.

Tags

Next Story