ராமநாதபுரம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விழா

ராமநாதபுரம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விழா

பரமக்குடியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு நடந்த உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டது.


பரமக்குடியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு நடந்த உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் பரமக்குடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் உத்வேக பேச்சாளர்கள் மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜுலு தலைமை வகித்தார். மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளி படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. உயர் கல்வி குறித்த கையேடு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் உயர் கல்வி பயின்று பயன்பட வேண்டுமென தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார்.

மேலும் உயர் கல்வியில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குதல், கல்லூரிகளின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். தனியார் பள்ளிகளில் மட்டுமே உத்வேக பேச்சாளர்கள் மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் உத்வேக பேச்சாளர்கள் மூலம் தன்னம்பிக்கை அளிக்கப்பட்டதால் பலரும் பாராட்டினர்.

Tags

Next Story