ராமநாதபுரம் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் மொழிப்போர் தியாகிகள்  பொதுக்கூட்டம்
கூட்டத்தில் பேசும் எம்எல்ஏ
ராமநாதபுரம் மொழிப்போர் தியாகிகளால் தான் தமிழ் காக்கப்பட்டது சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சார்பில் பாரதி நகர் பகுதியில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தை மண்டபம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே ஜே பிரவீன் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றினார்.

அப்போது பேசுகையில் தமிழகத்தில் இந்தி திணைப்பை உருவாக்கி தமிழ் மொழியை அழித்து இந்தி மொழியை திணிக்க நினைத்ததால் நூற்றுக்கணக்கான தமிழ் மொழி தியாகிகள் தன்னையே உயிர் நீத்து தமிழைக் காத்தனர்.

மொழிப்போர் தியாகிகள் முதன் முதலில் நடராஜன் தாளமுத்து நடராஜன் ஆகியோர்கள் தமிழ் மொழிக்காக தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தன்னையே தீராக்கி தமிழ் மொழியை காத்த மொழி காத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தமிழ் மொழி இன்று தளபதி ஆட்சி காலத்தில் செம்மொழியாக சீராக ஆட்சி செய்து வருகிறது.

மொழி காத்த வீரர்களுக்கு செம்மார்ந்த வீர வணக்கம் செலுத்தும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறி அவர்களின் தியாகங்களை உலகுக்கு எடுத்துச் சொல்லி தமிழைப் பேணிப் பாதுகாக்க ஒவ்வொருவரும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதில் தலைமைக் கழகப் பேச்சாளர் கவிச்சுடர் கவிதை பித்தன் சிறப்புரையாற்றினார் அவர் பேசுகையில் மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த நிகழ்வுகள் மறைந்த நிகழ்வுகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன் நகர் மன்ற தலைவர் கார்மேகம் துணைத் தலைவர் பிரவீன் தங்கம் ராமநாதபுரம் பிரபாகரன் செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பிடி ராஜா, ஆர் எஸ் மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு,

வாலாந்தரவை சங்கர் வழுதூர் சாமி, கௌதமன் , பாரதிநகர் திமுக நிர்வாகிகள் மோகன், லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஓம் சக்தி நகர் பாரதி நகர் பட்டணம் காத்தான் சுப்பையா நகர் வழுதூர் வாலாந்தரவை உச்சிப்புளி ராமேஸ்வரம் திருப்புல்லாணி மண்டபம் ஆர்எஸ் மங்கலம் திருவாடனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story