ராமநாதபுரம் தேசிய புலனாய்வு சோதனை
தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு சோதனை நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி முருகன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. சேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆயுதங்கள் வைத்திருந்தால், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது,தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது,இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகளில் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெங்களூர் ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தகாது.
Next Story