ராமநாதபுரம் புதிய மின்விளக்குகள்

ராமநாதபுரம் புதிய மின்விளக்குகள்

Ramanathapuram New Lights

பரமக்குடியில் சர்வீஸ் ரோட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பரமக்குடியில் சர்வீஸ் ரோட்டில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு வைகை ஆற்றின் இரு கரைகளில் நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அதன் பின்பு பராமரிப்பு இல்லாமல் இருள் சூழ்ந்து சர்வீஸ் ரோடு காணப்பட்டது. பரமக்குடி நகராட்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த சேது கருணாநிதி நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 210 எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்விளக்கு கொண்டுவரப்பட்டது. சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆண்டுகளுக்கு பிறகு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story