ராமநாதபுரம் : குடிநீர் கிணறு அமைக்க எதிர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் ஊராட்சியில் குடிநீருக்காக தோண்டப்படும் கிணறுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் நிறுத்தப்பட்ட பணி.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவியதால் விலைக்கு குடம் ஒன்றுக்கு ரூ15கொடுத்து வாங்கு சூழ்நிலை ஏற்பட்டது. குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளர்களின் செயல்முறை படி ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் உபரி நிதி வங்கி வட்டி தொகையிலிருந்து பணிகளை செய்திட நிர்வாக அனுமதி கேட்டு பெறப்பட்ட நிதியில் தேவிபட்டினம் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட திறந்தவெளி கிணறு மதிப்பீடு ரூ20 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி மோட்டார் மற்றும் பைப் லைன் வேலை பார்த்தல் இதன் பிரகாரம் முனியப்பன் ஊரணி அருகில் திறந்தவெளி கிணறு வேலை முடிவுற்றது.மற்றொரு கிணறு தெற்கு தோப்பில் வேலை நடைபெற்று வந்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த கிணறு தோண்டுவதற்கு பிரச்சனை செய்து எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர்.எனவே ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள குடி நீர் கிணறு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கிணறு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் குடிநீருக்கு தற்போது மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த கிணறு பணி முழுமையடைந்தால் தான் கோடை காலத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய முடியும் என்று ஊராட்சித் கவுன்சிலர்கள் கூறினர். மேலும் தற்போது இந்த கிணறு பணி முடிக்கா விட்டால் மொத்தம் உள்ள 12 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்துவிடுவோம் என்றனர். எனவே உடனடியாக கிணறு பணியை முடித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று தேவிபட்டினம் ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர் மேலும் இந்த கிணறு தோண்டுவதில் இந்த பகுதி மக்களுக்கு எந்த பிரச்சனையும் சிரமமும் இல்லை என்றனர்.தேவிபட்டினம் ஊராட்சி பெரிய ஊராட்சியாக இருப்பதால் இப்பணியை உடனடியாக முடித்து தர வேண்டும் என்றும் இதில் தலையிடுபவர்கள் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி ஊராட்சி முற்றுகை இட்டனர்.
Next Story