ராமநாதபுரம் துணை ராணுவம் அணிவகுப்பு
துணைராணுவம் அணிவகுப்பு
பாராளுமன்ற தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ படையினர் அணிவகுப்பு.
இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் விழிப்புணர்வு பேரணி சாயல்குடியில் நடைபெற்றது. சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது இர்ஷாத் தலைமையிலும், சார்பு ஆய்வாளர் சல்மோன் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் சாயல்குடி காவல்துறையினர் மற்றும் இந்திய துணை ராணுவ படையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். தேசத்தின் நலன் கருதி 100% வாக்களிக்க வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சாயல்குடி ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகளான கன்னியாகுமாரி சாலை, இராமேஸ்வரம் சாலை, அருப்புக்கோட்டை சாலைகள் வழியாக துரைசாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது. சாயல்குடி காவல்துறையினருடன் இணைந்து, இந்திய தேசிய துணை ராணுவ வீரர்களின் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பை கண்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்தனர்.
Next Story