இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!!

AIADMK

AIADMK

AIADMK
அதிமுகவின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அத்தொகுதி வேட்பாளர் பா.ஜெய பெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் களம் காணும் வேட்பாளர் பா ஜெய பெருமாள் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்றைய முன்தினம் பசும்பொன்னில் தொடங்கினார். பின்னர் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அதனைத் தொடர்ந்து திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள சமுதாயத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அங்குள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இன்று மூன்றாம் நாள் தனது பிரச்சாரத்தை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தொடங்கிய ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயபெருமாள் அறந்தாங்கி நகர் அறந்தாங்கி தெற்கு ஒன்றியம் மணமேல்குடி ஒன்றியம் ஆவுடையார் கோயில் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Next Story



