ராமநாதபுரம்: ஓய்வூதியர்கள் ரயில் மறியல் போராட்டம்

ராமநாதபுரம்: ஓய்வூதியர்கள் ரயில் மறியல் போராட்டம்

மறியல் போராட்டம் 

ராமநாதபுரத்தில் ரயில்வே நிலையம் முன் பென்சனர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரத்தில் E.P.S.95 பென்சனர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பூக்கடம்பு ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி தொடங்கி வைத்தார். போராட்டத்தில் திருவாடானை நித்தியகல்யாணி பஞ்சாலை,கமுதக்குடி தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் உட்பட சுமார் ஐந்து தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்டனர்.இந்தியாவில் 76 லட்சம் இ பி எஸ் பென்சனர்கள் சரி பாதிக்கும் மேல் ரூ1000 மட்டும்தான் வாங்குகின்றனர். எனவே மத்திய அரசு குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் அகில இந்திய அமைப்புடன் இணைந்து நடத்தியும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

எனவே இபிஎஸ் திட்டத்தில் உள்ள சரத்துக்கள் அடிப்படையில் உயர் சம்பளம் பெறுபவர்களுக்கு முழு சம்பளத்தை பென்ஷன் பெறுவதற்காக நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்.எனவே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகள் நாடாளுமன்ற நிலைக்குழு வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர் குழு என்று அனைவரும் குறைந்தபட்ச பென்ஷன்னாக ரூ 3000 வரை உயர்த்தி பரிந்துரை செய்த பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று. மறியலில் ஈடுபட்டனர் இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தனியார் மஹாலில் வைத்தனர்.

Tags

Next Story