ராமநாதபுரம்: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்
குறைதீர் முகாம்
ராமநாதபுரம் வழுதூர் சமுதாயக் கூடத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே வழுதூர் சமுதாயக் கூடத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் வட்டார வழங்கல் அலுவலர் தமீம்ராஜா தலைமையில், தலைமை எழுத்தர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குடும்ப அட்டை விண்ணப்பம், பிழை திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல் மாற்றம் செய்தல் குறித்து மக்கள் மனு கொடுத்தனர். ஊராட்சி மன்ற தலைவி முத்தமிழ்செல்வி பூரணவேல், நியாயவிலைக் கடை விற்பனையாளர் துரை ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
Next Story