ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில் நடை அடைப்பு

கோதண்ட ராமர் கோவிலில்  பட்டாபிஷேகம் இன்று நடத்தி வைப்பதை   முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில்  இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டது.
ராமநாதபுரம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஜூன் 14, 15, 16 ,ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு ஜூன் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் ராமநாதசுவாமி கோவில் அருகே ராவண சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஜூன் 15ஆம் தேதி இன்றும் சனிக்கிழமை பகல் 12:30 மணிக்கு தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலில் இலங்கையில் ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின்பு இலங்கை வேந்தனாக விவிஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அதன் காரணமாக அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் நடை இன்று அதிகாலை 2 மணி அளவில் திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர் அதன் பின் காலை ஏழு முப்பது மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு விபீஷண பட்டாபிஷேகத்திற்காக ராமநாதசுவாமி பர்வத வர்த்தி அம்பாள் கோதண்ட ராமர் கோவிலுக்கு புறப்பட்டனர் மதியம் 12 மணி அளவில் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகத்தை முடித்து வைத்த பின்பு மீண்டும் மாலை 5 மணி அளவில் இராமநாத சுவாமி திருக்கோவில் மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story