ராமநாதபுரம் :ரூ.37.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட நீச்சல் குளம்

ராமநாதபுரம் :ரூ.37.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட  நீச்சல் குளம்

நீச்சல் குளம் 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நீச்சல்குளம் மற்றும் பேவர்பிளாக் நடைபாதை ஆகியவைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புனரமைக்கப்பட்ட புதிய பணிகளை தொடங்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். அவரின் வழியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறையில் பல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருவதோடு விளையாட்டுத்துறையில் பல வெற்றியாளர்களை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க இங்குள்ள நீச்சல்குளம் சீர்செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றுடன் இவ்வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் , மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் , மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, பண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவிதா கதிரேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story