ராமநாதபுரம் சங்க விழா நடைபெற்றது

ராமநாதபுரத்தில் இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா.
ராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட தலைவர் வரதராஜன் மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு ஆகியோர் தலைமையில், மாவட்ட பொருளாளர் கூரிதாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களின் உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story