ராமநாதபுரம்: பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு

ராமநாதபுரம்: பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு

தேர்வான மாணவ மாணவிகள் 

மாநில அளவிலான ஜுடோ போட்டிக்கு பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளி மாணவ மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

மாவட்ட அளவிலான ஜுடோ போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலை பள்ளியை சார்ந்த மாணவ மாணவியர் ராபின்சிங் யுவஶ்ரீபிரபா ரித்திகா தீப்திதர்ஷன் ரேஷ்மா ஆகியோர் 19 வயதுக்குட்பட்ட ஜுடோ போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்று தங்க பதக்கத்தையும் சான்றிதழும் பெற்றனர்.

இம்மாணவ மாணவிகள் அடுத்த மாதம் பெரம்பலூரில் நடைபெறும் மாநில அளவிளான ஜுடோ போட்டிக்கு தேர்வு செய்யபட்டனர் இம்மாணவ மாணவியரையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித் சிவகுருராஜா அன்வர்ராஜா ஆகியோரை பள்ளியின் தாளாளர் என் ஜாஜஹான் ஜமாஅத் தலைவர் எம் சாகுல்கமீது செயலாளர் எம் சாதிக்அலி பொருளாளர் ஏ லியாக்கதலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர் எம் அஜ்மல்கான் உதவித்தலைமைஆசி ரியர் எம் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டினர்.

Tags

Next Story