ராமநாதபுரம் இலங்கைக்கு அனுப்ப இருந்த பீடி இலை பறிமுதல்
புகை இலை
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடலோரத்தில் சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்த கொண்டு செல்லப்பட்ட இரண்டு டன் பீடி இலை குற்றப்புலனாய்வு போலீசாருடன் இணைந்து கடலோர காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடலோரத்தில் சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்த கொண்டு செல்லப்பட்ட இரண்டு டன் பீடி இலை குற்றப்புலனாய்வு போலீசாருடன் இணைந்து கடலோர காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், இங்கு குறைந்த விலையிலும், அங்கு அதிக விலையில் விற்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சட்டவிரோத கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏர்வாடி பகுதியை ஒட்டியுள்ள வாலிநோக்கம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. தகவல் அறிந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடலோரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது அந்த வாகனத்தில் 30 கிலோ எடையுள்ள ஏழு சாக்கு மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. உடனே அவைகளை கைப்பற்றிய அதிகாரிகள் இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு , இந்த பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது , வானத்தை நிறுத்தி விட்டு தப்பி சென்ற குற்றவாளிகள் யார் என்று புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story