ராமநாதபுரம் சிவராத்திரி முன்னிட்டு பரதநாட்டிய கலைஞரால் பரதநாட்டியம்

திரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு விடிய விடிய நாட்டையாஞ்சலி. பல மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு.
ராமநாதபுரம் மாவட்டம் திர உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் திருக்கோயில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை முதல் காலை வரை மூலவர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ பரத கலா அகாடமி டிரஸ்ட் வழங்கும் ஆறாம் ஆண்டு நாட்டியாஞ்சலி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நாட்டியாஞ்சலி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்றன. இதற்காக கர்நாடகா, கேரளா, பெங்களூர், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று மதராசவராத்திரி விழாவில் கூச்சுப்புடி, பரதம் உள்ளிட்ட நாட்டியங்கள் ஆடி சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் துவக்கமாக சிவனுக்கு முக்கிய நடனமான கைலாய வாத்தியம் இசை பிரமாண்டமாக இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதனை காண ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் விடிய விடிய அமர்ந்து நாட்டியாஞ்சலியை ரசித்தனர்.

Tags

Next Story