ராமநாதபுரம்: மாநில அளவிலான ஓபன் யோகாசன போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு

ராமநாதபுரம்: மாநில அளவிலான  ஓபன் யோகாசன போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு

யோகாசனம் 

தமிழ்நாடு யோகாசன சங்கத்தின் ராமநாதபுரம் கிளை, நேரு யுவ கேந்திரா, இன்பன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில ஓபன் யோகாசன போட்டி நடந்தது. ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு சங்க செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் நம்பூதியன் முன்னிலை வைத்தார். இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் தாமஸ் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் யாழினி புஷ்பவல்லி, அபிராமம் அல்-ஹதி நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் காஜா நஜ்முதீன் உள்பட பலர் பங்கேற்றனர். யோகா மாஸ்டர்கள் மலைச்சாமி, புவனேஸ்வரி, ராமலட்சுமி, அமுதா, வினிதமணி, தங்கேஸ்வரன், சுகன்யா, கங்கா, சந்துரு, விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். இதில் ராமநாதபுரம் முஹமது சதக் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி பிகாம் மூன்றாம் ஆண்டு மாணவிகள் யோகலட்சுமி, கல்பனா தேவி, பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவி சகானா சகானி, பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மாணவி கார்த்திகா, ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிக் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி ரிதன்யா, வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர் ஹரிகிருஷ்ணன், ஆறாம் வகுப்பு மாணவிகள் ஸ்ரீனிகா பிரதிக் ஷா, எட்டாம் வகுப்பு மாணவி வேதிகா, ஐந்தாம் வகுப்பு மாணவர் முனீஸ் பாபு ஆகியோர் போட்டிகளில் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Tags

Next Story