ராமநாதபுரம்: துர்நாற்றம் வீசும் குடிநீர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கல்லூர் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இம்மக்களுக்கு குடிநீர் வரும் குழாய் அருகே குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கிய தண்ணீர் நிரம்பியுள்ளது.
மேலும் தொண்டி பேரூராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பி ஏற்பட்டு 6 மாத காலமாக குடி தண்ணீர் வீணாகி வருகிறது இதனால் இங்கு தண்ணீர் தொடர்ந்து தேங்கியுள்ளது. இதனால் இக்குழாயில் தொடர்ந்து துர்நாற்றம் வீசும் குடிநீர் வருகிறது இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.
இது பற்றி இப்பகுதி மக்கள் கூறுகையில் குப்பைகள் கலந்த கழிவுநீர் தேங்கி பல மாதங்களாக கிடக்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, தொடர்ந்து குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசும் தண்ணீர் வருவதால் அதை பாத்திரம் கழுவ மற்றும் வீட்டில் வளர்க்கும் கால் நடைகளுக்கு குடிக்க கூட பயன்படுத்த முடியாத அவல நிலை இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது