ராமநாதபுரம் தமிழ் புத்தாண்டு நிகழ்வு

ராமநாதபுரம் தமிழ் புத்தாண்டு நிகழ்வு

 விசுகனி பூஜை

ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று. அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கி சுமார் நூற்றுக்கு மேலான கனிகள் சாமிக்கு படைத்து பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் வெற்றிலை பாக்கு வாழைப்பழங்களுடன் கை நீட்டம் வழங்கப்பட்டது. இந்த கை நீட்டமானது சபரிமலையில் ஆண்டுதோறும் நடக்கின்ற விசுகனி பூஜையில் வழங்கப்பட்டது போன்று பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லபாய் ஐயப்பனின் கோவிலில் தலைமை குருசாமி மோகன் தலைமையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசுகனி பூஜையை ஐயப்ப சேவை அறக்கட்டளையினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் காலை முதல் மாலை 4 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story