ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம் எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ உய்ய வந்தாள் அம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ஆண்டிப்பண்டாரத்தார் சமூகத்தாருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உய்ய வந்தாள் அம்மன் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆலயம் அமைந்துள்ளது.
பிப்ரவரி 19 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்று. தினசரி சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
புனித நீர் கலசங்களில் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை எமனேஸ்வரம் ஆண்டி பண்டாரத்தார் சமூகத்தினர் செய்திருந்தனர்.