இராமநாதபுரம் - வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்..!

இராமநாதபுரம் - வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்..!

வைகை ஆற்றில் தூய்மைப் பணி தொடக்கம்

இராமநாதபுரத்தில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தொடங்கிவைத்தார்.

இராமநாதபுரம் பரமக்குடியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு மதுரை, சிவகங்கை மாவட்டங்களை கடந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கம்மாயாக செல்கிறது. இந்த வைகை ஆற்றை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்கள், நாணல்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஆற்றில் வரும் கண்ணீர் முழுமையாக கண்மாய்களுக்கு சென்றடையாததால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கியது. இதனை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கொடியசைத்து துவக்கி வைத்தார்‌.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, தாசில்தார் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூர் என்ற இடத்தில் இருந்து காக்காதோப்பு வரை ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் பணிகள் முதல் கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 46 ஜேசிபி வாகனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story