ராமநாதபுரம்; கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம்; கிராம சபை கூட்டம்

 நரிப்பையூர் ஊராட்சியை சாயல்குடி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நரிப்பையூர் ஊராட்சியை சாயல்குடி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் இந்திய குடியரசின் 75ம் ஆண்டை முன்னிட்டு கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரிப்பையூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் தலைமையிலும், துணைத்தலைவர் சண்முகராஜா முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் செந்திவேல் கலந்துகொண்டார். இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் முக்கிய தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.

குறிப்பாக நரிப்பையூர் ஊராட்சியை சாயல்குடி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். நரிப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் நலன்கருதி நிரந்தரமாக மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல் நரிப்பையூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் அதிக அளவு கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. ஆனால் கால்நடை மருத்துவமனை இல்லை. ஆகவே பகுதிநேர கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். மேலும் போக்குவரத்து அதிகமுள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடையால் பெருமளவு விபத்துக்கள் நடைபெறுகிறது. சாலை அருகிலேயே அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்களின் அட்டகாசம் அதிகரிப்பதால், அந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆகவே இந்த மதுக்கடையை மூட அரசு உத்தரவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்களை பொதுமக்கள் கோரிக்கையாக முன் வைத்தனர். இதுகுறித்து வட்டார நாடார் சங்க தலைவரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான தங்கப்பாண்டியன் கூறும்போது, நரிப்பையூர் ஊராட்சியை சாயல்குடி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து சமுதாய ஆதரவுடன் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்றார்.

Tags

Next Story