ராமநாதபுரம் வாக்காளர் விழிப்புணர்வு கோளப்பட்டி
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மகளிர் மன்றங்களுக்கிடையே சார்பில் கோளப்பட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட மகளிர் திட்டத் துறை மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோள போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர்ம .விஷ்ணு சந்திரன், தலைமையில் நடைபெற்றது ராமநாதபுரம் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று மகளிர் குழுக்களால் கோள போட்டிகள் நடத்தப்பட்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை. அதேபோல், மக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று 100% வாக்களித்து ஜனநாயகக் கடமையைச் செய்ய வேண்டும்.அதன்பின், "என் வாக்கு என் உரிமை" என்ற வரிகளை உணர்த்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் ஒவ்வொரு கையிலும் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பரபதகளை ஏந்தி நின்றனர்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) .சிவானந்தம், மகளிர் திட்ட அலுவலர் சையது சுலைமான், உதவித் திட்ட அலுவலர்கள் அரவிந்த், அழகப்பன், தங்கப்பாண்டியன், சுய உதவி குழுக்கள்மகளிர் குழுக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story