ராமநாதபுரம் மீனவர் பலி

ராமநாதபுரம் மீனவர் பலி

மீனவர் மரணம்

மீன் பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து நடுக்கடலில் படகில் பலி உடலை பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைத்து போலீஸார் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று ஒரு விசைப்படகில் 8 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் செல்வராஜ் என்ற மீனவர் திடீரென படகில் மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து சக மீனவர்கள் அவரது உடலை மீட்டு ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு கொண்டு வந்து உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மீன் பிடிக்க சென்ற மீனவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பம் மற்றும் சக மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து அவருடன் படகில் சென்ற சக மீனவர் தேசிகன் தெரிவிக்கும்போது செல்வராஜுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் வயிற்று பிழைப்புக்காக மீன்பிடிக்க கடலுக்கு வந்தார் இந்நிலையில் உடல்நலக் கோராறு காரணமாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது உயிரிழந்துள்ளார் தமிழக அரசு இறந்த செல்வராஜ் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி மீனவர் செல்வராஜ் ன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் பேட்டி தெரிவித்துள்ளார்

Tags

Next Story